மயிலாடுதுறை தீயணைப்பு துறை அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு
தீயணைப்போர் நீத்தார் நினைவு நாளையொட்டி, மயிலாடுதுறை தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது;
கடந்த, 1944ம் ஆண்டு ஏப்ரல், 14ம் தேதி,மும்பை துறைமுகத்தில், வெடிமருந்து பொருட்கள் நிரப்பிய நிலையில் நின்றிருந்த, "எஸ்.எஸ்., ஃபோர்ட் ஸ்கைன்' என்ற கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 12 கப்பல்கள் எரிந்து நாசமாயின. தீயை அணைக்க போராடிய, 66 தீயணைப்புத்துறை வீரர்கள் பலியாயினர். தீயணைப்புத்துறை சார்பில், இத்துயர நிகழ்வு "தீயணைப்போர் நீத்தார் நினைவு நாள்' என ஆண்டுதோறும் இந்திய முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தீத்தடுப்பு பணியின்போது உயிர் நீத்த 32 தீயணைப்பு துறை நிலைய அலுவலர், பாதுகாப்பு படை வீரர்களின் நினைவாகவும் நீத்தார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
மயிலாடுதுறை தீயணைப்புதுறை நிலைய அலுவலக வளாகத்தில் நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் "தீயணைப்போர் நீத்தார் நினைவு நாள்' அனுசரிக்கப்பட்டது. நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினர்.