மயிலாடுதுறையில் மோடி பிறந்த நாள் விழா தூய்மை பணி நாளாக கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை தூய்மை பணி நாளாக பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.

Update: 2021-09-17 12:02 GMT

மயிலாடுதுறையில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை பாரதீய ஜனதா கட்சியினர் தூய்மை பணி நாளாக கொண்டாடினர்..

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை மயிலாடுதுறையில் பா.ஜ.க. நிர்வாகிகள் தூய்மைப் பணி நாளாக கொண்டாடினர். மயிலாடுதுறை பா.ஜ.க. நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

மயிலாடுதுறை நகராட்சி 25-வது வார்டில் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு, இவ்வார்டில் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக அகற்றப்படாமல் குவிந்திருந்த குப்பைகளை அக்கட்சியினர் அகற்றி டிராக்டரில் ஏற்றி சென்றனர். தொடர்ந்து மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.

Tags:    

Similar News