மயிலாடுதுறை:ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்;
மயிலாடுதுறை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ பங்கேற்பு. நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி கோரிக்கை பதாகையுடன் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல மயிலாடுதுறை ஒன்றியம் நல்லத்துக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள ஒன்பது குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடத்தை தூர் வாரி, அனைத்து குளங்களிலும் நீர் நிரப்ப கோரிக்கை விடுத்து பதாகைகளுடன் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.