இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிதி உதவி
குத்தாலம் அருகே இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் மருத்துவ செலவிற்காக நிதி உதவி.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி கம்பன் தெருவை சேர்ந்த சங்கர்-பானுமதி தம்பதியின் மகள் கோகிலா (வயது 32) . தந்தை இறந்த நிலையில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் கோகிலா தனது தாயாருடன் கப்பூரில் வசித்து வருகிறார். மருத்துவ செலவிற்கு மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் அறக்கட்டளை உதவியுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு மருத்துவ உதவி கோரினார். அமைச்சரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கோகிலாவின் மருத்துவ செலவிற்கு நிதிஉதவி வழங்கினார். அப்போது குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்கை. சங்கர் கப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கோகிலாவின் உறவினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.