மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.
மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்படும் ஆக்சிஜன் பிளான்ட், கொரோனா சிகிச்சை வார்டு, பிராண வாயு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
முன்னதாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கலந்தாலோசித்தார்.