மேட்டூர் அணை மே மாதம் 24 ம்தேதி திறக்க திட்டம்: தூர்வாரும் பணிகள் தீவிரம்

காவிரிகிளை ஆறுகள் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Update: 2022-05-21 15:15 GMT

காவிரிகிளை ஆறுகள் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை  விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

மேட்டூர் அணை மே மாதம் 24ம்தேதி திறக்கப்பட உள்ள நிலையில் காவிரிகிளை ஆறுகள் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை தண்ணீர் வருவதற்குள் விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டபணிகள் மற்றம் நீடித்தல், புனரமைத்தல், மற்றம் நவீனபடுத்துதல் திட்டத்தில் காவிரி கிளைஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் 870 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணிகள் 49 இடங்களில் நடைபெற்று வருகிறது. 20-ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மேட்டூர் அணை வருகின்ற 24 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூர்வாரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா கழனிவாசல், வாடகுடி, திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்கால், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணிகள், மதகுகள் சீரமைத்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடிக்குமாறும் தண்ணீர் திறப்பதற்கு முன் அனைத்து தூர்வாரும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆய்வின் போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் த சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News