மயிலாடுதுறை தண்ணீர் தேக்கி வைக்க வெட்டப்பட்ட குழியில் சிறுவன் தவறி விழுந்து பலி
மயிலாடுதுறை அருகே வீடு கட்டுமாணப்பணிக்காக தண்ணீர் தேக்கி வைக்க வெட்டப்பட்ட குழியில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலபரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு.40. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி சுகுணா, மகன்கள் அஸ்வின்.(4), மித்ரன்(2) ஆகியோர் உள்ளனர்.
இவரது வீட்டின் அருகே உள்ள செந்தில்குமார் என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி, அதில் தண்ணீரை தேக்கி கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தி வந்துள்ளார் இந்நிலையில் இன்று செந்தில்குமார் வீட்டின் எதிர் வீட்டில் நடைபெற்ற விஷேசத்தில் கலந்துகொள்வதற்காக பாலகுரு, சுகுணா ஆகியோர் மூத்த மகன் அஸ்வினை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டபோது விளையாடி கொண்டிருந்த மகன் அஸ்வினை காணவில்லை. தேடியபோது செந்தில்குமார் வெட்டி வைத்திருந்த தண்ணீர் நிரம்பிய குழியில் அஸ்வின் தவறி விழுந்து இறந்திருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து செம்பனார்கொவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்; போலீசார் விரைந்துவந்து, அஸ்வின் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன், வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் கிராமமக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது