மயிலாடுதுறையில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறையில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார்.

Update: 2022-04-18 10:46 GMT

அரசு பேருந்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மயிலாடுதுறை கலெக்டர் லலிதா  மாலை அணிவித்தார்.

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி பள்ளி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு சென்று வருகிறது.

அவ்வகையில் மயிலாடுதுறைக்கு வந்த வ.உ. சிதம்பரனார் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை செயின்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி வாகனத்தில் உள்ள வ. உ. சி. உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவிகள் வ. உ. சி. கண்காட்சியை பார்வையிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறுகளை தெரிந்து கொண்டனர். இந்த கண்காட்சி வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்றும் நாளையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் நகராட்சி தலைவர் செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News