மயிலாடுதுறை நகராட்சி 24-வது வார்டு ஒதுக்க கோரி வி.சி.க. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகராட்சி 24-வது வார்டு ஒதுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-01-30 17:52 GMT

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனி வார்டான 24-வது வார்டினை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தியது. இந்த வார்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் நகர செயலாளர் பிரபாகர் என்பவரின் மனைவி சுகந்தி பிரபாகரன் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே முதல் ஆளாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இன்று நடைபெற்ற வார்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த வார்டு தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தே.பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு, 24-வது வார்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News