மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தடை யை மீறி தர்ப்பணம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-10-06 12:19 GMT

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையை மீறி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று காவிரிகரை மற்றும் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்காக  பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மகாளய அமாவாசையான இன்று மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் தடையைமீறி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் அளித்தனர். காவல்துறை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டிருந்தாலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் திதி கொடுத்து வருபவர்களை விரைந்து முடித்துக் கொள்ளவும், மேலும் உள்ளே வருபவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறியும் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News