மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவி வழங்கிய பூம்புகார் எம்எல்ஏ

மயிலாடுதுறையில் கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதித்த திருநங்ககைள் 20 பேருக்கு நிவாரண உதவிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

Update: 2021-05-24 11:00 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு  அரசி, பருப்பு போன்ற நிவாரண தொகுப்பை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் 20பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பேருந்து நிலையம், ரயில்கள், கடைகளில் தினந்தோறும் சென்று பணம் வசூல் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை ஊரடங்கு உத்தரவு காரணமாக ரயில்கள் இயங்காததாலும், கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் இவர்கள்; வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

ஊரடங்கால் பசி பட்டினியில் வாடி தவித்த திருநங்கைகளுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மகளிகை பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள்களை பூம்புகர் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார். மேலும் அரசு சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்..

Tags:    

Similar News