மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: உலக அமைதிக்காகவும், கொரோனா நோய்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்பு.
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. தரங்கம்பாடி பங்குத்தந்தை செல்வராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. "நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன" என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழியந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
பத்து நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் டிசம்பர் 2-ஆம் தேதி சிறப்பு திருப்பலியும், திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.