சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் , 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 500 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஹோட்டல் அக்சர்தம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 500 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இதில் சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா.அலெக்சாண்டர், சுவாமிநாதன் மாவட்ட பிரதிநிதி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேருராட்சி செயலர். குகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்