செம்பனார் கோயிலில் நடமாடும் காய்கறி வாகன விற்பனையை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன தொடக்கி வைத்தார்.

Update: 2021-05-26 01:45 GMT

செம்பனார்கோயிலில் நடமாடும் காய்கறி வாகன விற்பனையை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பொதுமுடக்க உத்தரவை அறிவித்துள்ளது. இதன்படி, மருந்தகங்கள், பால் விற்பனையகங்களைத் தவிர பிற கடைகளை திறக்க தடைவிதித்தும்,

காய்கறிகளை நடமாடும் அங்காடி மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளுக்கு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை ஊர்திகள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அவ்வகையில், செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழுத் தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை உதவி வேளாண்மை இயக்குநர் குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பொன்னி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதில், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் பங்கேற்று, நடமாடும் காய்கறி விற்பஅங்காடியை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News