மயிலாடுதுறை வட்டாரப்போக்குவரத்து அலுவலரைக் கண்டித்து விஷம் குடித்த விவசாயி
தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து விஷம் குடித்தாராம்
மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு முறைகேடாக வாகன பதிவு செய்ததை கண்டித்து இளைஞர் ஒருவர் விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மயிலாடுதுறை மாவட்டம் முத்தூர், அகர ஆதனூரை சேர்ந்த விவசாயி மதன்மோகன்(35.) இவர் தனக்கு சொந்தமான இரண்டு டிராக்டர்களுக்கும் முறைகேடாக வாகன பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து எஸ்பி, மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து தனது தாய் உமா மகேஸ்வரியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் மனமுடைந்த மதன்மோகன் இன்று மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம் குடித்து, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் அப்போது தனது இந்த முடிவிற்கு காரணம் மயிலாடுதுறை முன்னாள் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் சண்முகவேல் மற்றும் தற்போதைய அலுவலர் ராம்குமார் ஆகியோரே காரணம் என குற்றம்சாடி முழக்கமிட்டார். தொடர்ந்து அரை மயக்க நிலைக்குச் சென்ற சென்ற மதன் மோகனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி சென்று சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது