மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலைப் பணிகளை எம்எல்ஏ ராஜ்குமார் ஆய்வு
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை எம்எல்ஏ ராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஒன்றியங்களில் கடந்த 3 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ள 11 சாலைகளை தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 21.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் இன்று ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.