கலெக்டர் உத்தரவின்படி மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கலெக்டர் உத்தரவின்படி மயிலாடுதுறையில் சாலையில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை ஜே.சி.பி .இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கால்டெக்ஸ், மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு, மகாதானத் தெரு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சிமெண்ட் நடைபாதை, மேற்கூரைகள், பேனர்கள் ஆகியன போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
இதனை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். இந்த பணி மேலும் 2 நாட்களுக்குத் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.