மயிலாடுதுறையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 105 -ஐ கடந்தது

மயிலாடுதுறையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.105-ஐ கடந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.;

Update: 2021-10-22 10:54 GMT

தமிழகத்தில் பெட்ரோல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இன்றைய காலை நிலவரப்படி மயிலாடுதுறை நகரில் பெட்ரோல் விலை 105 ரூபாயை கடந்து விற்பனையாகி வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.104.85க்கு விற்பனையான நிலையில் இன்று காலை ரூ.105.16க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் நேற்று 104.94க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் இன்று 105.24க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசு அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ரூ.3 விலை வரிகுறைப்பு செய்து கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அறிவித்தது. இதன்காரணமாக அப்போதைக்கு பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே அவ்விலை ரூ.5க்கு மேல் உயர்ந்து தற்போது ரூ.105 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்து ரூ.101.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News