மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-26 11:05 GMT

குடியரசு தினவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை உரம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 73வது குடியரசுதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சட்டமன்ற அலுவலகங்கள், அரசு அலவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் தேசியகொடி ஏற்றப்பட்டது. செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகம், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலை  பள்ளிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார். 

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கொடியேற்றினார். நகராட்சியால் சேகரிக்கப்பட்டு வரும் மக்கும் குப்பை, மக்கா குப்பையிலிருந்து  தயாரிக்கப்பட்ட இயற்கை  நுண்ணுயிர் உரங்களை 20 பேருக்கு வழங்கினார். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியில் நீதிபதி ரிஸ்வானா பர்வீன் தேசியகொடியை ஏற்றினார். அரசின் வழிகாட்டுதழ்களை பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News