மயிலாடுதுறை நகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி

மயிலாடுதுறை நகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது.;

Update: 2022-02-10 12:09 GMT

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இ.வி.எம். இயந்திரங்கள் அனுப்பும் பணி கணிணி மூலம் நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு 79 பூத்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த 79 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஒதுக்கீடு செய்யும் பணி மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் பார்வையாளர் கோட்டாட்சியர் பாலாஜி,தேர்தல் நடத்தும் அலுவலர் பாலு முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வார்டுவாரியாக ஒவ்வொரு பூத்திற்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் , கட்டுப்பாட்டு கருவிகளுக்குரிய எண்கள் வழங்கப்பட்டது. நாளை ஒதுக்கீடு செய்யப்பட்ட இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News