மயிலாடுதுறை நகராட்சி தேர்தல்: பா.ம.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு
மயிலாடுதுறை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கப்பட்டது.;
மயிலாடுதுறை நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
4-வது வார்டில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கமல்ராஜா, 3-வது வார்டில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கண்ணகி, நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் மயிலாடுதுறை நகராட்சியில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்படும். மேலும், நகரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும், மதுபானக்கடைகள் அனைத்தும் முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடத்தில் எடுத்துக்கூறி பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனிசாமி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.