மயிலாடுதுறை நகராட்சி மன்ற உறுப்பினராக 23 வயது இளைஞர் பதவி ஏற்பு

மயிலாடுதுறை நகராட்சி மன்ற உறுப்பினராக 23 வயது இளைஞர் பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2022-03-02 12:27 GMT

மயிலாடுதுறை நகராட்சி உறுப்பினராக 23 வயது இளைஞர் சர்வோதயம் பதவி ஏற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ௨௨ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. .

இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 24 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பாலு தலைமையில் பதவிப்பிரமாணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். மேலும் நகராட்சியில் 16-வது வார்டில் போட்டியிட்ட 23 வயதான இளைஞர் சர்வோதயம் வார்டு உறுப்பினராக பதவிப் பிரமாணம் உறுதி ஏற்றுக் கொண்டார். அப்போது சக வார்டு உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News