மயிலாடுதுறை ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
மயிலாடுதுறை ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலில் 134 ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்;
மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் குட்டகுலத்தெருவில் புகழ்வாய்ந்த ஸ்ரீ மதுர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 134ஆம் ஆண்டு பங்குனி உற்சவ திருவிழா கடந்த 31ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, சக்தி கரகம் காவிரி ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்டது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் சக்திகரகத்துடன் வீதிவுலாவாக ஆலயம் வந்தடைந்தனர். அங்கு தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.