மயிலாடுதுறை அருகே மனைவி, 2 மகள்களுடன் மாயம் : கணவன் போலீசில் புகார்
மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் மனைவி, இரண்டு மகள்களுடன் காணவில்லை என்று கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்சரகத்திற்கு உட்பட்ட கொற்கை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் அதே ஊரை சேர்ந்த உறவினர் சந்திரன் எனபவரது மகள் மகேஸ்;வரி(36) என்பவரை கடந்த ௧௩ வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ௧௨ வயதுக்கு உட்பட்ட 2 மகள்கள் உள்ளனர்.. ராஜ்குமார் துபாய் அபுதாபியில் பெயின்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு கொற்கை கிராமத்திற்கு வந்த ராஜ்குமார் மனைவி மகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1ம்தேதி அதிகாலை தூங்கி எழுந்த ராஜ்குமார் வீட்டில் இருந்த மனைவி மற்றும் தன் பெண் பிள்ளைகளை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டு பீரோவில் இருந்த 18பவுன்நகை மற்றும் 45 ஆயிரம் ருபாய் பணத்தையும் காணவில்லை. உடனடியாக தனது மாமனார் சந்திரன் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் மனைவி மற்றும் பிள்ளைகள் கிடைக்காததால் மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தான் சம்பாதித்து வாங்கிய நகைகளை அடகு வைத்ததால் மனைவி மகேஸ்வரியுடன் சிறுசிறு தகராறு ஏற்பட்டதாகவும், நியூட்ரிசியன் வேலைக்கு சென்ற மகேஸ்வரி அடிக்கடி போன் செய்து ஒருசிலரிடம் பேசுவது பிடிக்காமல் கண்டித்ததாகவும் கூறினார்.
ராஜ்குமார் மனைவி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் காவல்துறையினர் உரிய விசாரணை செய்து தனது மனைவியையும் 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.