மயிலாடுதுறையில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம்!

மயிலாடுதுறையில் ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி கூறினார்.;

Update: 2021-06-05 15:11 GMT

மாவட்ட கண்ணகாணிப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் பேட்டி அளித்த காட்சி. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஆறு, வாய்க்கால்கள், வடிகால்களை முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் தூர்வார 23 இடங்களில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 431 கி.மீ, தூரத்திற்கு தூர்வாறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

வரும் 12ம்தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிப்பதற்காக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கண்ணகாணிப்பு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி கிர்லோஷ்குமார் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

பின்னர் குளிச்சார் அர்ஜனவாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வரும் 14ம் தேதிக்குள் முடிப்பதற்காக கூடுதல் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பணிகளை விரைந்து முடிப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அதனால் விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News