மயிலாடுதுறை-எடுத்துக்கட்டி சாத்தனூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
மயிலாடுதுறை மாவட்டம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது;
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம்,எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான நிவேதா எம் .முருகன் ரிப்பன் வெட்டி இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், நேரடி கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.