மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.;
மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் விதமாக பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து சாலைகளில் இரண்டாவது நாளாக ஆக்ரமிப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றும் பணி இன்று நடந்தது.
மயிலாடுதுறை மணிக்கூண்டு, கச்சேரிசாலை, காந்திஜீ சாலை உள்ளிட்ட இடங்களில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. அவ்வகையில், சாலையில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த சிமெண்ட் நடைபாதை, மேற்கூரைகள், பேனர்கள் ஆகியன போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.