மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் லலிதா அறிவித்து உள்ளார்.;

Update: 2021-10-29 03:15 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.

நகரின் பல பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல்  தேங்கி நிற்கிறது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்து உள்ளார்.

Tags:    

Similar News