விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி-மயிலாடுதுறை பா.ஜ.க. வலியுறுத்தல்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி தரவேண்டும் என மயிலாடுதுறை பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்
தமிழக அரசு கொரோனா பரவலை காரணம்காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதித்துள்ளது. இதனால் பக்தர்கள், இந்து அமைப்புகள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.சுகுணாசிங் தலைமையில் பா.ஜ, ,இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்பு பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அரசு தடைவிதித்திருப்பதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் வழிபாட்டை கொண்டாட வேண்டுமென்று காவல்துறையினர் வலியுறுத்தினர். இதில் பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி, திருக்கோயில்,திருமடங்கள் பாதுகாப்பு பேரவை,, இந்து முன்னணி மற்றும் விநாயகர் சிலைகள் தயாரிப்பவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிவில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில் கரோனா காலக்கட்டத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் கடந்த ஆண்டுபோல் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அனுமதி அளிக்க வேண்டும் இல்லை என்றாலும் இந்து அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.