மயிலாடுதுறை அரசு வழக்கறிஞருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாராட்டு

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞருக்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2022-04-10 04:32 GMT

மயிலாடுதுறை அரசு வழக்கறிஞர் ராமசேயோனுக்கு  மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 03.01.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல் நிலைய எல்லையில் உள்ள கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்கு விசாரனை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இவ்விசாரனையில் அரசு தரப்பு வழக்கறிஞராக ராம.சேயோன் ஆஜரானார். இவ்வழக்கின் விசாரனை முடிந்து ஏப்ரல் 7-ஆம் தேதி குற்றவாளிகள் இருவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ராம.சேயோனை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு கூட்டம் நடத்திய போது, நேரில் சந்தித்து, வழக்கிற்குரிய தீர்ப்பு நகலை வழங்கினார். அப்போது சிறப்பாக வழக்கினை நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த அரசு வழக்கறிஞரை காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Tags:    

Similar News