திருமண நிதியுதவி,தாலிக்கு தங்கம் மாவட்ட கலெக்டர், எம்.பி. வழங்கல்

மயிலாடுதுறை அருகே திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.பி. ராமலிங்கம் வழங்கினர்.

Update: 2021-07-02 12:32 GMT

மயிலாடுதுறை அருகே 427 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.பி. ராமலிங்கம் வழங்கினர்.

மயிலாடுதுறை அருகே சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 427 பயனாளிகளுக்கு 3 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் திருமணநிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில்; சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களுக்கு திருமணநிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரணநிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டு 427 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 90 ஆயிரத்து 952 மதிப்பிலான திருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்கும் தங்கம் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 23 நபர்களுக்கு தலா ரூ.2,000 கொரோனா நிவாரண நிதியுதவியையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், .பன்னீர்செல்வம், ராஜகுமார் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News