மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் மே தினவிழா
மயிலாடுதுறையில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் சார்பில் மே தினவிழா கொண்டாடப்பட்டது.;
மயிலாடுதுறையில் மாவட்ட இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற நல சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சங்க கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட தலைவர் பகவதி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரண்டு சக்கர மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகன டிங்கர், பெயிண்டர், எலக்ட்ரீசியன் ஆகிய தொழில் செய்பவர்களை மோட்டார் சட்டத்தில் இணைத்து தனி வாரியம் அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.