மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து கண்டித்து மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-14 14:22 GMT

மயிலாடுதுறையில் மாவீரன் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாவீரன் வன்னியர் சங்கத்தினர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனத் தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய பங்கீடு கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், ரத்து செய்யப்பட்ட உத்தரவிற்கு எதிராக  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில இளைஞரணி செயலாளர் கோமல் மாரியப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News