தரங்கம்பாடி பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்
தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுன சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது.
தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சி உட்பட்ட தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சுற்றுப்பகுதியில் மாபெரும் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், திமுக பிரமுகர் எம் ஆர் ஜே முத்துக்குமார், நகர துணை செயலாளர் மதியழகன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.