காவல்ஆய்வாளரின் அத்துமீறலைக்கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஆர்ப்பாட்டம்

காவல்துறையை கண்டித்தும் ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2022-01-30 13:15 GMT

மயிலாடுதுறையில் காவல்துறையைக்கண்டித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

கோவையில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் அத்துமீறி செயல்பட்ட காவல் ஆய்வாளரைக் கண்டித்து மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதிமொழி வாசகத்தை படித்தபோது, அவரைத் தடுத்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணா என்பவர் இந்து மதவெறி என்ற வார்த்தையை நீக்க வலியுறுத்தியும், காந்தியை சுட்டுக் கொன்றது கோட்சே என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் அத்துமீறிய காவல்துறையை கண்டித்தும், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணாவைக் கண்டித்தும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு கட்சியின் நகர செயலாளர் டி.துரைக்கண்ணு தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

Tags:    

Similar News