சீர்காழி அருகே தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நயினார்தோப்பு கிராமத்தில் வயல் பகுதியில் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில் அந்த நபர் குறித்து எந்த அடையாளமும் தெரியவில்லை.உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அமர்ந்த நிலையில் தூக்கு மாட்டியது போல் உள்ளதால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.