மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மநீம கட்சி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டண ஆர்ப்பாட்டம்.;
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் காலி எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசை விரோத போக்கை கண்டித்து மக்கள் நீதி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.