மயிலாடுதுறையில் எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.;
எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து மயிலாடுதுறையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு பங்கேற்பு.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சித்ராசெல்வி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.