மகாளய அமாவாசை: அரசு தடை உத்தரவால் வெறிச்சோடியது தரங்கம்பாடி கடற்கரை

மகாளய அமாவாசை தினத்தன்று அரசு தடை உத்தரவால் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை கடற்கரை வெறிச்சோடியது.

Update: 2021-10-06 12:41 GMT
தரங்கம்பாடி கடற்கரை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. போர்வீரர்கள் தங்கும் அறை, ஆயதக்கிடங்கு, சமையல்அறை,தொல்லியல் அருங்காட்சியகமும் உள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுபாட்டுட்டில் உள்ள வரலாற்று சின்னமாக விளங்கும் டேனிஷ் கோட்டை இரண்டுமுறை பழமை மாறாமல் புதுப்பிக்கபட்டுள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து வந்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகையின்றியும் உள்ளூர் மக்கள் கூட செல்லாமல் பொலிவிந்து கிடந்த தரங்கம்பாடிக்கு ஊரடங்கு தளர்வுகளால் தற்போதுதான் சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் மகாளய அமாவாசை தினமான இன்று காவிரிகரை மற்றும் பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரை ஆகிய இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு கூடும்பட்சத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவிட்டிருந்தார்.

இதனால் இன்று தரங்கம்பாடி கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரைக்கு வந்த ஒருசில சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் கடற்கரையோர காவல்படை, பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News