மஹா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடிய, விடிய நாட்டியாஞ்சலி

மஹா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடிய, விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.;

Update: 2022-03-02 08:54 GMT

மஹாசிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி நடந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில்  சிவராத்திரி விழா கொண்டாடபட்டது. அதே போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள திருஞான சம்பந்தர் ஞானம் பெற்ற சட்டைநாதர் கோவிலில் பல்வேறு இசை நிகழ்சியுடன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

நவ கிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமான வைத்தியநாத சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடை பெற்றது. சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்மன் வழிபாடு செய்த ஸ்தலமும் நவகிரகங்களில் புதன் ஸ்தலமும் ஆன  அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத. ஸ்ரீசுவேதரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் நடைபெற்றது.

மகாசிவராத்திரி விழாவில் ஏராளமான கலைஞர்கள் பங்கு பெற்ற  பாரதநாட்டிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி  விடிய விடிய நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை  திரளான பக்தர்கள் பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News