மயிலாடுதுறை அருகே மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மயிலாடுதுறை அருகே மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-05-10 14:37 GMT

மயிலாடுதுறை அருகே கோவில் விழாவில் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

மயிலாடுதுறை அருகே உள்ள குளிச்சார் கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுதோறும் சித்திரை மாத பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். 15 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குளிச்சார் குளக்கரையில் இருந்து மஞ்சள் உடை உடுத்தி ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும் பம்பை மேளம் முழங்க வீதி உலாவாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு மகா காளி அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News