தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில் மதுரை ஆதீனம் பங்கேற்பு

தருமபுர ஆதீனம் சிவிகை பள்ளக்கில் எழுந்தருளி தருமபுர ஆதீன வீதிகளில் பட்டண பிரவேசம் மேற்கொள்ளவுள்ளார்;

Update: 2022-05-21 15:30 GMT

தருமபுரம் ஆதீன குருபூஜை விழாவில்  பங்கேற்ற மதுரை ஆதீனம் 

மயிலாடுதுறையில் தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆதிகுருமுதல்வர் குருபூஜை விழா, குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா, ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு ஆதீனகர்த்தர் பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இன்று 21ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது காலை ஆதின மரபுபடி தொடங்கியது.

தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து சவாரி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தத்தில் ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தற்போது சொக்கநாதர் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த குருபூஜை விழாவிற்கு மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் வருகை தந்தார்.

தருமபுர ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சொக்கநாதர் பூஜை மடத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு பூஜையில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து மகேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை சர்ச்சைக்குள்ளாகி தடை விதிக்கப்பட்டு பின்னர் தடை விளக்கப்பட்ட பட்டினப்பிரவேசம் நிகழ்வு இரவு நடைபெற உள்ளது. தருமபுர ஆதீன கர்த்தர் சிவிகை பள்ளக்கில் எழுந்தருளி தருமபுர ஆதீன வீதிகளில் பட்டண பிரவேசம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Tags:    

Similar News