எல்.கே.அத்வானியின் 94-ஆவது பிறந்த நாள் விழா: பாஜகவினர் சிறப்பு வழிபாடு

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.;

Update: 2021-11-08 18:25 GMT

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 94-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜகவினர் கோயிலில் சிறப்பு வழிபாடு:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 94-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் மயிலாடுதுறையில் நகர பாஜக சார்பில் அத்வானியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை திருவிழந்தூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், பாஜக நகரத் தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் அத்வானியின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News