சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 300 மது பாட்டில்கள் பறிமுதல்

சீர்காழி அருகே காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-10-05 14:51 GMT

சீர்காழி அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி கிராமத்தில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் உதவி ஆய்வாளர் பார்த்திபன், தலைமை காவலர் பாலசுப்பிரமணியன், முதல் நிலை காவலர் குணசேகரன், காவலர் ராஜேஷ் மற்றும் மத்திய புலனாயவுப் பிரிவு தலைமை காவலர் சாலமோன் சார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 300 மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கபட்டது.காரில் இருந்தவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ளாட்சிதேர்தலுக்காகசுந்தர்ராஜ்,வெங்கடேசன்,கண்ணதாசன்,மகேந்திரன் மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய 5பேர் காரைக்காலில் இருந்து மது பாட்டில்களை கடத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து 300 மது பாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மதுபாட்டில்களை கடத்திய 5பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News