சேமநல நிதியை உயர்த்தியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தியதை வரவேற்று திமுக வழக்கறிஞர்கள் அணியினர்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 10 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூபாய் 7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்து ம் வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு திமுக மாவட்ட வழக்கறிஞர்கள் அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் நாகை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராமசேயோன் தலைமையில் நீதிமன்றம் முன்பு பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
2012இல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் சேமநல நிதி தற்போது தமிழக முதல்வரால் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.