குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2021-11-28 04:10 GMT
கொலை செய்யப்பட்ட வைத்தியநாத சுவாமி.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் வைத்தியநாதசுவாமி(40). லாரி டிரைவரான இவர் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சித்தப்பா மூர்த்தியின் மகன்களான திவாகர்(32), தினேஷ்(34) ஆகியோருடன் வைத்தியநாதசுவாமிக்கு இடப் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  மூவலூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாதசுவாமி மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த திவாகர் அருகிலிருந்த இரும்பு கைப்பிடி உடைய வாறுகோலால் வைத்தியநாத சாமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து போன வைத்தியநாத சாமி தலையில் ரத்தம் சொட்ட சொட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் அங்கு மயங்கி நோயாளிகள் அமரும் இடத்தில் மயக்க நிலையை அடைந்துள்ளார். இதனைப் பார்த்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக உடல் சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. சம்பவம் அறிந்த குத்தாலம் போலீசார் வைத்தியநாதசுவாமியை கட்டையால் தாக்கிய அவரது சித்தப்பா மகன்களான திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News