ஆக்சிஜன் பற்றாக்குறை 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:- ஆக்சிஜன் தேவைப்படும் 7 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2021-05-20 08:00 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினந்தோறும் திருச்சியிலிருந்து 30 ஆக்சிஜன் சிலின்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரவேண்டிய ஆக்சிஜன் சிலின்டர் வராததால் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சைபெற்று வந்த 31 நோயாளிகளுக்கு கையிருப்பில் உள்ள 12 ஆக்சிஜன் சிலின்டர்கள் மற்றும் 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் குறைந்த அளவில் ஆக்சிஜன் தேவைப்பட்ட 7 நோயாளிகள் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு 90 ஆக்சிஜன் சிலின்டர்களும் நாளை 30 ஆக்சிஜன் சிலின்டர்களும் வந்துவிடும் என்பதால் தொடர்ந்து 4 நாட்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Tags:    

Similar News