மாணவர்களுடன் கலந்துரையாடிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
தருமபுரம் ஆதீன மடத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க வந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் தேவாரப் பாடசாலையை பார்வையிட்டு பாடசாலை மாணவர்களுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திற்கு வந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டு ஆதீனத் திருமடத்தில் கொலுக்காட்சியில் அமரவைத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து உரையாடினார். அவருக்கு தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் திருக்கடையூர் அபிராமி அம்மன் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.