சீர்காழி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே 100 ஆண்டு பழமைவாய்ந்த வடபத்ரகாளியம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update: 2021-09-13 08:53 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமாரக்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சிதிலமைடைந்த இவ்வாலயத்தை புதுப்பிக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கிராமக்கள்,பக்தர்கள்,குலதெய்வ வழிபாட்டாளர்கள் இணைந்து திருப்பணிகள் செய்து வந்தனர். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது,

முன்னதாக கடந்த 11 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி 3 கால யாகசாலை பூஜைகள் நேற்று நிறைவடைந்து, இன்று காலை நான்காவது கால யாகசாலை பூஜையும் அதனைத் தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு வடபத்ரகாளியம்மன் ஆலயத்தை வலம் வந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வடபத்ரகாளியம்மன் மூவலர் கும்பாபிஷேகமும் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதில் கிராமவாசிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

வடபத்ரகாளியம்மன் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பெண்கள்,ஆண்கள், சிறுமிகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் அம்மன் அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடினர்.அவர்களுக்கு கோவில் குருக்கள் விபூதி அணிவித்து சாந்தப்படுத்தினர்.இதனால் குமாரக்குடி கிராமமக்கள் பரவசமடைந்தனர

Tags:    

Similar News