மயிலாடுதுறை அருகே சாலையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு போக்கு வரத்து பாதிப்பு
மயிலாடுதுறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. இதனால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் பகுயில் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றது.இதனால் அவ்வழியே சென்ற இருசசாக்கர வாகனம் முதல் பேருந்து, லாரிகள் வரை இருபுறமும் நிறுத்தபட்டது. வாகன ஓட்டிகளும் பொதூமக்களும் சூழ்ந்து நின்று நல்ல பாம்பை கண்டு ரசித்ததுடன் புகைபடமும் எடுத்தனர்.
ஆனால் எதற்க்கும் அசையாமல் சுமார் 1 மணி நேரம் வரை சாயிலேயே படமெடுத்து நின்றது. பின்னர் வாகனங்கள் புறப்பட தொடங்கியதால் மெதுவாக வயல் பகுதியில் சென்று மறைந்தது. பாம்பு படமெடுத்து நின்றதால் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.